பதிவு செய்த நாள்
18
மார்
2025
11:03
அயோத்தி; ஸ்ரீ ராம ஜென்மபூமி மந்திரில் ஸ்ரீ ராம நவமி விழா, சைத்ர சுக்ல நவமி வரும் ஏப்ரல் 6, 2025 அன்று தெய்வீக மகிமையுடனும், சிறப்புடன் கொண்டாடப்பட உள்ளது.
அயோத்தி ராம ஜென்மபூமியில் ராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது முதல் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்தாண்டு ராம நவமி பண்டிகை பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ராம நவமி தினமான ஏப்ரல் 6ம் தேதி ஞாயிறு காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை ராமலாலா அபிஷேகம் நடைபெறுகிறது. திரைச்சீலை காலை 10:30 மணி முதல் 10:40 மணி வரை திறந்திருக்கும்.
ராம்லாலாவின் அலங்காரம் காலை 10.40 மணி முதல் 11.45 மணி வரை நடைபெறும். ஸ்ரீ ராம்லாலா பிறந்த மதியம் 12:00 மணிக்கு ஆர்த்தி மற்றும் சூரிய திலகம் வழிபாடு நடைபெறும். விழாவில் சூரியனின் கதிர்கள் ராம்லாலாவின் நெற்றியில் ஒளிரும் அற்புத காட்சி நடைபெறும். இந்த முழு நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பை பக்தர்கள் வீட்டில் இருந்தும் பார்த்து மகிழலாம். இதற்காக ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அயோத்தி ராமர் கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.