வாசலில் நீர் தெளித்து கோலமிடுவது பெண்களின் அன்றாடக் கடமை. அதுவும் பண்டிகை நாட்களில் ஆர்வத்துடன் பெரிய கோலங்களை வரைய விரும்புவர். குறிப்பாக குறிப்பிட்ட தெய்வத்திற்குரிய பண்டிகையன்று அந்த தெய்வத்தை வரைகின்றனர். மகாசிவராத்திரி என்றால் சிவலிங்க கோலம் என்பது போல. இதனால் தெருவில் வருவோர் செருப்பு அணிந்த காலுடன் கோலத்தை மிதிப்பதை தவிர்க்க முடியாது. தெய்வ உருவங்களை வரைய விரும்பினால், பூஜையறையின் முன்பாக அல்லது விளக்கின் முன்பாக வரையலாம். வாசலில் புள்ளிக்கோலம் அல்லது ரங்கோலி இட்டால் போதும்.