திருமாலின் இருப்பிடம் வைகுண்டம். இதைத் தவிர திருமால் ‘வெள்ளையந் தீவு’ என்னும் இடத்தையும் தன் இருப்பிடமாக கொண்டிருக்கிறார். கேள்விப்படாத சொல்லாக இருக்கிறதே என நினைக்க வேண்டாம். பாற்கடலைத் தான் வெள்ளையந்தீவு என்பர்.
இங்கு பாம்பு படுக்கையின் மீது யோகநி்த்திரையில் இருப்பார் திருமால். உலகிலுள்ள அனைத்தையும் அறிந்தபடி துாங்குவது யோகநித்திரை. அசுரர்களால் துன்பம் நேரும் போதெல்லாம் வெள்ளையந்தீவின் கரைக்கு வந்து தேவர்கள் ‘ஓம் நமோ நாராயணாய’ எனச் சொல்லி கூப்பாடு போடுவர். இதனால் இதற்கு ‘கூப்பாடு உலகம்’ என்றும் பெயருண்டு.