பதிவு செய்த நாள்
19
மார்
2025
11:03
பழநி; பழநி கோவில் உபகோவிலான மாரியம்மன் கோயில் மாசி திருவிழாவில் 1008 பால்குடம் உற்சவ சாந்தி விழா, அன்னாபிஷேகம் நடைபெற்றது.
பழநி கோயில் நிர்வாகத்தின் உபயோகிலான மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழாவை முன்னிட்டு 1008 குடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. மடத்திலிருந்து துவங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக மாரியம்மன் கோயிலை அடைந்தது உச்சிக்கால பூஜையில் பாலாபிஷேகம் நடைபெற்று உற்சவர் சாந்தி நடந்தது. மாலையில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஆதவன் ஃபுட்ஸ் நிர்வாகி மெர்சி, சித்தநாதன் அண்ட் சன்ஸ் சிவனேசன், பழனிவேல், கார்த்திகேயன், செந்தில் குமார், விஜயகுமார், கன்பத் கிராண்ட் ஹரிஹர முத்து அய்யர், சரவணப் பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் ஜேபி சரவணன், பொருளாளர் செந்தில்குமார், வ.உ.சி மன்ற தலைமை நிர்வாகிகள், கவுரவத் தலைவர் அசோக், செயலாளர் சுப்பிரமணி, பொருளாளர் சுந்தர், செய்தி தொடர்பாளர் முருகேசன், குகன் நிர்வாக குழு உறுப்பினர் சங்கர், குமார், ஐயப்பன், துர்கா கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.