பதிவு செய்த நாள்
19
மார்
2025
11:03
திருப்பூர்; பங்குனி மாத சுவாதி நட்சத்திர நாளான நேற்று, திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், காரைக்கால் அம்மையார் குருபூஜை விழா நடந்தது. அர்த்தஜாம பூஜை அடியார்கள் திருக்கூட்டம், மாணிக்கவாசகர் திருக்கூட்டம் சார்பில், காரைக்கால் அம்மையார் குருபூஜை நேற்று நடந்தது. கல்மண்டப வரிசையில் உள்ள, காரைக்கால் அம்மையார் மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு, மகா அபிேஷகம் நடந்தது. சிவாச்சாரியார்கள், பல்வகை திரவியங்களால் அபிேஷகம் செய்தனர். சிவனடியார்கள், சிவபுராணம், திருத்தொண்டத்தொகை, காரைக்கால் அம்மையார் பாடிய திருஆலாங்காட்டு மூத்த பதிகம் பாடி வழிபட்டனர். தொடர்ந்து, காரைக்கால் அம்மையார் உற்சவர் சப்பரத்தில் எழுந்தருளி, கோவில் வெளி மற்றும் உள்பிரகார உலா நடந்தது.