ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் எழுந்தருளிய திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2025 01:03
ஸ்ரீரங்கம் : திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில் பங்குனி திருவிழாவையொட்டி, கொள்ளிடம் ஆற்றில் தாயாா் மற்றும் பெருமாள் பல்லக்கில் எழுந்தருளினர்.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில் சோழநாட்டில் அமைந்துள்ள 108 வைணவத் திவ்ய தேசங்களில் நான்கவது திவ்ய தேசமாகும். மூலவர் புண்டரீகாட்ச பெருமாள், உற்சவ மூர்த்தி செந்தாமரைகண்ணன், மற்றும் உற்சவ தாயார் திருநாமம் பங்கயச்செல்வி பங்கஜவல்லி ஆகும். இங்கு இந்த வருடத்திற்கான பிரம்மோத்ஸவ உற்சவம் கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் சுவாமிக்கு தினமும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. விழாவின் மூன்றாம் நாளான இன்று காலை வட காவேரிக்கு பல்லக்கில் வந்த பெருமாள் அதிகாலை கொள்ளிடம் ஆற்றில் எழுந்தருளினாா். அவருக்கு சிறப்பு சேவை நடைபெற்றது. இதில் ஏராளமான பகத்ர்கள் தரிசனம் செய்தனர்.