சஷ்டி என்பது வளர்பிறை அல்லது தேய்பிறையின் ஆறாம் நாள். முருகனுக்கு உரிய விரதங்களில் முக்கியமானது சஷ்டி விரதம். பங்குனி சஷ்டி நாளில் முருகனை வழிபட்டால் எல்லா செல்வங்களும் உண்டாகும். சஷ்டி என்பது வளர்பிறை அல்லது தேய்பிறையின் ஆறாம் நாள். இத்திதிக்கு நாயகனாகவும், இத்திதியைக் குறித்த விரதத்துக்கு முக்கிய தெய்வமாகவும் விளங்குபவன் குகப் பெருமான். இன்று முருகனுக்குரிய மந்திரங்களான "ஓம் சரவணபவ "ஓம் சரவணபவாயநம "ஓம் முருகா ஆகிய மந்திரங்களில் ஏதாவது ஒன்றை நாள் முழுதும் ஜெபித்து வர வேண்டும். திருப்புகழ், கந்தசஷ்டிகவசம், ஸ்கந்தகுருகவசம், சண்முககவசம் பாடல்களில் ஏதேனும் ஒன்றை காலையிலும், மாலையிலும் பாராயணம் செய்ய வேண்டும். முருகன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்யவேண்டும். வீட்டில் காலை, மாலை கந்தசஷ்டி கவசம் படித்து வழிபடுதல் சிறப்பு. முருகன் கோயிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபட நினைத்தது நிறைவேறும்.