Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று சஷ்டி விரதம்; முருகனை வழிபட ... நத்தம் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா; அம்மனுக்கு மஞ்சள் நீராட்டம் நத்தம் மாரியம்மன் கோயில் பூக்குழி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தோடர் கோவில் கூரை வேயும் திருவிழா; பாரம்பரிய நடனமாடி உற்சாகம்
எழுத்தின் அளவு:
தோடர் கோவில் கூரை வேயும் திருவிழா; பாரம்பரிய நடனமாடி உற்சாகம்

பதிவு செய்த நாள்

20 மார்
2025
10:03

ஊட்டி; ஊட்டி மஞ்சக்கல் மந்து பகுதியில் தோடர் பழங்குடியின மக்களின் பாரம்பரிய கோவிலில், கூரை வேயும் திருவிழா நடந்தது.


நீலகிரி மாவட்டத்தில், தோடர், குரும்பர், கோத்தர், காட்டு நாயக்கர், இருளர் மற்றும் பணியர் ஆகிய, 6 வகையான பண்டைய பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அதில், தோடர் இன மக்கள் வசிக்கும் பகுதி மந்து என்று அழைக்கப்படுகிறது. இவர்கள் மாவட்டத்தின் பல பகுதிகளில், 67 மந்துகளில் வசிக்கின்றனர். இவற்றின் தலைமை மந்தாக, தலைகுந்தா பகுதியில் உள்ள முத்தநாடு மந்து உள்ளது. இந்நிலையில், ஊட்டி தாவரவியல் பூங்காவின் மேல்பகுதியில் உள்ள மஞ்சக்கல் மந்து பகுதியில் தோடர் பழங்குடி மக்களின் பழமையான கோவில் உள்ளது. இதன் கூரையை, 9 ஆண்டு களுக்கு பின் வேயும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்காக கோரக்குந்தா, அப்பர் பவானி உள்ளிட்ட வனங்களில் கிடைக்க கூடிய மூங்கில், பிரம்பு மற்றும் அவில் எனப்படும் ஒரு வகை புல் ஆகியவற்றை கொண்டு வந்தனர். தொடர்ந்து, தங்களின் பாரம்பரிய உடையணிந்து கூரை வேய்ந்தனர். அதன்பின் நேற்று மாலை கோவில் முன்பு அவர்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த கோவில் பணிகளை ஆண்கள் மட்டுமே மேற்கொள்வது வழக்கம். நிகழ்ச்சியில், கலெக்டர் லட்சுமி பவ்யா, எஸ்.பி.,நிஷா ஆகியோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி என்பது வளர்பிறை அல்லது தேய்பிறையின் ஆறாம் நாள். முருகனுக்கு உரிய விரதங்களில் முக்கியமானது சஷ்டி ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பூக்குழி திருவிழா மார்ச் 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி ராஜூ இருதய மருத்துவமனை வில்வ விநாயகர் கோவிலில், ஸம்வத்ஸர அபிஷேகம் ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி கோயில் வளாகத்தில் மழைநீர் தேங்கி கழிவு நீர் குட்டையாக மாறியதால் பக்தர்கள் ... மேலும்
 
temple news
அனுப்பர்பாளையம்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ் பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar