நத்தம் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா; அம்மனுக்கு மஞ்சள் நீராட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மார் 2025 10:03
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பூக்குழி திருவிழா மார்ச் 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மார்ச் 18 தீச்சட்டி, மாவிளக்கு, பால்குடம், கழு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று காலை அம்மன் முளைப்பாரி ஊர்வலத்துடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வர மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. வழிநெடுகிலும் பக்தர்கள் மஞ்சள் நீரை ஊற்றி அம்மனை வரவேற்றனர். இதை தொடர்ந்து இரவு பூப்பல்லக்கில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.