உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் முதல் நாள் தெப்பதிருநாள்; மண்டப சேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மார் 2025 12:03
உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஆண்டுதோறும் தெப்பத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் முதல் நாள் அம்பாள் புறப்பாடு, மண்டப சேவை நடைபெற்றது.
உறையூர் கமலவல்லி நாச்சியார் திருக்கோவில் ஸ்ரீரங்கம் அருள்மிகு அங்கநாத ஸ்வாமி திருக்கோவிலின் உப கோவில் ஆகும். 108 வைணவ திருத்தலங்களில் 2 வது திவ்விய தேசமாக திகழ்கிறது திருச்சி மாநகரின் மத்தியில் இக்கோவில் அமைந்துள்ளது. திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்றது. திருப்பாணாழ்வார் இத்தலத்தில் அவதரித்த பெருமையும் இக்கோவில் பெற்றுள்ளது. இக்கோவிலில் திருப்பள்ளி ஓடம் (தெப்ப உற்சவம்) விழா சிறப்பாக துவங்கியுள்ளது. விழாவில் முதல் நாள் அம்பாள் புறப்பாடு, மண்டப சேவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்த கொண்டு தரிசனம் செய்தனர்.