கோவை மகா சங்கரா மினி ஹாலில் காஞ்சி மகா பெரியவருக்கு அனுஷ அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மார் 2025 10:03
கோவை; கே. எஸ். கார்டனில் அமைந்துள்ள மகா சங்கரா மினி ஹாலில் மாதாந்திர அனுஷ நட்சத்திர வழிபாடு சிறப்பாக நடைபெறும். பங்குனி அனுஷ நட்சத்திரத்தை முன்னிட்டு காஞ்சி மகா பெரியவர் விக்கிரகத்திற்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம் நடைபெற்றது. இதில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் மகா பெரியவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காஞ்சி மகா பெரியவரை தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியின் ஆன்மீக சொற்பொழிவாளர் சுவாமிநாதன் அவர்கள் மகா பெரியவரின் மகிமை என்ற தலைப்பில் கலந்து கொண்டு பேசினார். அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.