விளமலில் வெள்ளி சிறப்பு வழிபாடு; விளக்கொளியில் ஜொலித்த மதுரபாஷினி அம்மன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மார் 2025 05:03
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று பங்குனி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 153 வது தேவாரத்தலமாக விளமல் பதஞ்சலி மனோகரர் கோவில் விளங்குகிறது. சிவனுக்கு வெப்பமான நெற்றிக்கண் இருப்பதைப்போல், இத்தல அம்மன் மதுரபாஷினிக்கு சந்திரனைப் போல் குளிர்ச்சியான நெற்றிக்கண் இருக்கிறது. இத்தலம் வித்யாபீடமாகக் கருதப்படுகிறது. அகத்தியர் இத்தல அம்பாளை ஸ்ரீர தாரிணி, ராஜசிம்மாசனேஸ்வரி, ஸ்ரீலலிதாம்பிகையே என புகழ்ந்து போற்றியுள்ளார். இத்தலத்தில் பங்குனி வெள்ளியை முன்னிட்டு, இன்று (21ம் தேதி) மதுரபாஷினி அம்மனுக்கு பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கார பூஜைகள் நடந்தது. விளக்கொளியில் மதுரபாஷினி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த வழிபாட்டில் கோயில் ஊழியர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சந்திரசேகர சிவாச்சாரியார் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.