திருப்போரூர்; திருப்போரூர் அடுத்த சிறுதாவூர் கிராமத்தில், பழமைவாய்ந்த சின்னம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 17 ம் ஆண்டு தெப்பத்திருவிழா, நேற்று இரவு நடந்தது. இரவு 8:00 மணிக்கு கோவில் அருகே உள்ள பெரியகுளத்தில், அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் அம்மன் எழுந்தருளி, மூன்று முறை குளத்தை வலம் வந்தார். பக்தர்கள் வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். தொடர்ந்து, 9:00 மணியளவில் வீதி உலா நடைபெற்றது. விழாவில் ஊராட்சி தலைவர் அருள் உட்பட பலர் பங்கேற்றனர்.