திருமலை திருப்பதியில் அஹோபில மட ஜீயர் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மார் 2025 04:03
திருமலை; ஸ்ரீ அஹோபில மடத்தின் 46வது ஜீயர் ஸ்ரீ ஸ்ரீ ரங்கநாத யதீந்திர மகாதேசிகன் சுவாமி இன்று சனிக்கிழமை காலை திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமியை தரிசனம் செய்தார். முன்னதாக ஸ்ரீவாரி கோயில் வந்த அவருக்கு கோவில் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் கோயில் குருக்கள் சிறப்பு மரியாதையளித்து வரவேற்று, சன்னதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சுவாமி தரிசனம் செய்த ஜீயர் மகாதேசிகன் சுவாமிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.