புதுச்சேரி: முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், ஏக தின லட்சார்ச்சனை நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு, கோவிலில் ஹயக்ரீவ பெருமாள் சன்னதியில் உள்ள நவ நரசிம்மர் மற்றும் பானக நரசிம்மர் சுவாமிகளுக்கு, நேற்று காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை, நரசிம்ம சகஸ்ரநாம அர்ச்சனை, ஏகதின லட்சார்ச்சனையாக நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கோவில் சிறப்பு அதிகாரி, லட்சுமி ஹயக்ரீவப் பெருமாள் பக்த ஜனசபையார், லட்சுமி சரஸ்வதி மாருதி டிரஸ்ட் ஆகியோர் செய்தனர்.