பதிவு செய்த நாள்
10
டிச
2012
10:12
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ள தங்கும் விடுதி அறைகளின் வாடகை உயர்த்தப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ள தங்கும் விடுதிகளில் 250-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இந்த அறைகளின் வாடகை உயர்த்தப்பட்டு, உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே இருந்த வாடகை அடைப்புக்குறிக்குள் குறிப்பிடப்பட்டுள்ளது. குகன் இல்லம், குளிர் சாதன வசதி ரூ.2000(ரூ.1000). ராஜ அலங்கார இல்லம் ரூ.2500(ரூ.720). வள்ளி தெய்வானை இல்லம் ரூ.2000(ரூ.1500). கதிர்வேலகம், குளிர்சாதன வசதி ரூ.1500(ரூ.1000). வடிவேலகம், 4 படுக்கை ரூ.1000(ரூ.750). வடிவேலகம், 2 படுக்கை ரூ.750(ரூ.500). கடம்பன் இல்லம் ரூ.300(ரூ. 100).கடம்பன் இல்லம், குளிர் சாதன வசதி ரூ.1000 (வாடகை நிர்ணயிக்கப்படவில்லை). கார்த்திகேயன் விடுதி ரூ300(ரூ.200). கந்தன் இல்லம் ரூ.300(ரூ.200). கந்தன் இல்லம், குளிர்சாதன வசதி ரூ.500(ரூ400). இடும்பன் குடில்கள் முதல் வகுப்பு ரூ.300(ரூ.200). இடும்பன் குடில்கள், இரண்டாம் வகுப்பு ரூ.300(ரூ.150). ஹால் ரூ.1000 (ரூ.750). வேலவன் விடுதி, முதல் வகுப்பு ரூ.500(300). இரண்டாம் வகுப்பு ரூ.300 (ரூ.150). மூன்றாம் வகுப்பு ரூ.200(ரூ.100). சின்னக்குமாரர் விடுதி, தனி ரூ.200(ரூ.50). சின்னக்குமாரர் விடுதி, 2 படுக்கை அறை ரூ.300(ரூ200). அறைகளுக்கு முன் பதிவு செய்யும் முறையும் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.