பெரிய மாரியம்மன் கோவிலில் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மார் 2025 10:03
ஈரோடு; ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களான பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்களில் நடப்பாண்டு குண்டம் விழாவில், நேற்று முன்தினம் இரவு மூன்று கோவில்களிலும் ஒரு சேர கம்பம் நடப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று அதிகாலை முதல் மூன்று கோவில்களிலும், பெண்கள் ஏராளமானோர் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றியும், பால் ஊற்றியும் வழிபட தொடங்கியுள்ளனர். இதில்லாமல் ஏராளமானோர் அலகு குத்தி கோவிலுக்கு வந்தனர். நேற்று விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவில் வளாகத்தில் நீர் மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. அலகு குத்தி வரும் பக்தர்கள் அதிகளவில் வந்ததால் எம்.எஸ்.சாலை ஒரு வழிப்பாதையாக சில மணி நேரம் மாற்றப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஆயிரக்ணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.