மேட்டுப்பாளையத்தில் 63 நாயன்மார்கள் விழா; கும்பகோணத்தில் இருந்து சிலைகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மார் 2025 10:03
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில், 63 நாயன்மார்கள் விழா நடைபெற உள்ளதை அடுத்து, கும்பகோணத்தில் இருந்து சுவாமிகள் மற்றும் நாயன்மார்கள் உருவ சிலைகள் வாங்கி வந்தனர்.
மேட்டுப்பாளையம் பழைய சந்தை கடை பகுதியில், மைக்கன் மாரியம்மன் மகேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளை செயல்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த சிவனடியார் அறக்கட்டளை சார்பில், 63 நாயன்மார்கள் விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு நாயன்மார்கள் விழா நடத்த கும்பகோணத்தில் இருந்து, வெண்கல சிலைகள் வாங்க அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. இதை அடுத்து முதல் கட்டமாக, ஐந்து வெண்கல சிலைகள் வாங்கி உள்ளனர். இந்த சிலைகளுக்கு கோவிலில் பூஜை செய்து வைத்துள்ளனர்.