பதிவு செய்த நாள்
24
மார்
2025
12:03
திருப்புவனம்; தென் மாவட்டங்களில் பங்குனி திருவிழா கால கட்டங்களில் பக்தர்களுக்கு விறகு கட்டைகளை மரக்கடை உரிமையாளர் இலவசமாக வழங்கி வருகிறார்.
தாயமங்கலம், இருக்கன்குடி, காரைக்குடி , திருப்புவனம், நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் பங்குனி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். பக்தர்கள் பலரும் அம்மனுக்கு நேர்த்தி கடன் விரதமிருந்து அக்னிசட்டி ஏந்தி ஊரை வலம் வந்து அம்மன் கோயில்களில் நேர்த்தி கடன் செலுத்துவார்கள். அக்னிசட்டியில் தீ வார்க்க விறகு கட்டைகள் தேவை. நன்கு காய்ந்த வேம்பு மர விறகுகள் தான் பயன்படுத்த முடியும். ஒவ்வொரு ஊரிலும் 500க்கும் மேற்பட்டோர் அக்னிசட்டி எடுப்பார்கள். அனைவருக்கும் இலவசமாக 50 வருடங்களுக்கும் மேலாக விறகு கட்டைகள சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த மரக்கடை உரிமையாளர் ரவிச்சந்திரன் 58, ஒரு சீசனுக்கு மாரியம்மன் கோயிலுக்கு மட்டும் அக்னிசட்டி எடுத்து வருபவர்கள் ஆயிரம் பேர் வரை இருக்கும், தேடி வருபவர்கள் யாருக்கும் இல்லை என்று சொல்லாமல் விறகு வழங்கி வருகிறார். அக்னிசட்டி எடுக்கும் பக்தர்களுக்காக கடந்தாண்டு மாசி முதல் வேம்பு மர விறகுகளை சேகரித்து வைத்து விடுகிறார். அவற்றை விற்பனை செய்வதே இல்லை. ஒரு பக்தருக்கு தேவையான விறகுகளை வழங்கும் இவர் பங்குனி மாதத்தில் மட்டும் அக்னி சட்டிகளுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள விறகுகளை வழங்குகிறார்.
கி. ரவிச்சந்திரன் கூறுகையில் : திருவிழா அன்று அன்னதானம் செய்வது போன்ற பணிகளில் பலரும் ஈடுபடுவார்கள், என் தந்தை அங்காள ஈஸ்வரி என்ற பெயரில் மரக்கடை தொடங்கியதில் இருந்து அக்னிசட்டி எடுக்க உள்ள பக்தர்களுக்கு விறகுகள் வழங்கினார். அக்னிசட்டி எடுப்பவர்ககளுக்கு சிறிய ரக விறகு தான் தேவைப்படும். எனவே அவற்றை சிறு சிறு கீற்றுகளாக மிஷினில் அறுத்து காய வைத்து குவித்து வைத்துள்ளோம். ஆரம்பத்தில் திருப்புவனம் மாரியம்மன் கோயிலுக்கு அக்னிசட்டி எடுப்பவர்கள் மட்டுமே வந்து வாங்கிச் சென்றனர். தகவல் பரவி நத்தம், தாயமங்கலம், இருக்கன்குடி உள்ளிட்டட பல்வேறு கோயில்களுக்கு செல்லும் பத்கர்களும் வர தொடங்கிவிட்டனர். எனவே அனைவருக்கும் என் தந்தை விறகு வழங்கி வந்தார்.அவரை பின்பற்றி நாங்களும் வழங்கி வருகிறோம், 50வருடங்களுக்கும் மேலாக விறகு வழங்கி வருகிறோம், இனியும் வழங்குவோம்,என்றார்.
அக்னிசட்டி எடுக்க விறகு வாங்க வந்த பக்தர் சரஸ்வதி கூறுகையில் : 20 வருடமாக திருப்புவனம், தாயமங்கலம் மாரியம்மன் கோயிலுக்கு அக்னிசட்டி எடுத்து வருகிறேன், ஆரம்ப காலம் தொட்டு இங்கு விறகு இலவசமாக வழங்கி வருகின்றனர். எத்தனை முறை வந்து கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் விறகு வழங்குகின்றனர்,என்றார்.