திருப்பதி ஏழுமலையானுக்கு கேமரா நன்கொடை அளித்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மார் 2025 11:03
திருப்பதி; நெல்லூரில் உள்ள வம்சிராம் பில்டர்ஸின் தலைவர் வம்சிராம் சுப்பாரெட்டி செவ்வாய்க்கிழமை ரூ.8.84 லட்சம் மதிப்புள்ள கேனான் டிஜிட்டல் மிரர்லெஸ் கேமரா மற்றும் லென்ஸ்களை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கினார். நன்கொடையாளர் சார்பாக, தேவஸ்தான வாரிய உறுப்பினர் பானு பிரகாஷ் ரெட்டி திருமலையில் உள்ள கூடுதல் அலுவலர் அலுவலகத்தில் கேமரா மற்றும் லென்ஸ்களை ஒப்படைத்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.