சின்னசேலம்: அம்மையகரம் கிராமத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் வேள்வி பூஜை நடந்தது. விழாவையொட்டி வேள்வி பூஜை காலை 6 மணிக்கு துவங்கியது. ஜோதி, மாதேஸ்வரி மற்றும் கலியமூர்த்தி பூஜையை துவக்கி வைத்தனர். மன்ற தலைவர் தமிழரசிகுமார் வரவேற்றார். சண்முகம் முன்னிலை வகித்தார். காலை 8.30 மணிக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. அழகுவேலுபாபு எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வெங்கடாசலம் வேள்வி பூஜையை நடத்தினார். சின்னசேலம் ஒன்றிய சேர்மன் ராஜேந்திரன், பரத்குமார், ரத்தின சிகாமணி, முருகன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.