பதிவு செய்த நாள்
29
மார்
2025
10:03
அவிநாசி; சேவூர் முத்துக்குமாரசுவாமி ஜீவ பிருந்தாவனத்தில் பூரட்டாதி நட்சத்திர சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அவிநாசி தாலுகா, சேவூரில் எழுந்தருளியுள்ள சித்தர் முத்துக்குமாரசுவாமி ஜீவ பிருந்தாவனத்தில் பூரட்டாதி நட்சத்திர சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சேவூர் கோபி ரோட்டில் வடக்கு வீதியில் முசாபுரி தோட்டத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த சித்தர் முத்துக்குமாரசாமி என்பவர் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் நவகண்டம் கொடுத்து ஜீவ சமாதி அடைந்தார். இதில் நாள்தோறும் வழிபாடு, தியானம் ஆகியவை நடைபெற்று வருகிறது. குறிப்பாக செவ்வாய், வியாழன் , அமாவாசை, பௌர்ணமி நாட்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பூரட்டாதி நட்சத்திரத்தில் அதிகாலை முதல் இரவு வரை ஹோமத்துடன் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னை, திருச்சி, நாகர்கோவில், கன்னியாகுமரி,மதுரை, ஈரோடு,கோவை என பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு செய்து வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். நேற்று பூரட்டாதி நட்சத்திரத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.