திருப்பதி கோவிலில் வி.ஐ.பி., பிரேக் தரிசனம் 3 மாதங்கள் ரத்து; நிர்வாகம் நடவடிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மார் 2025 11:03
திருப்பதி: திருப்பதி கோவிலில் 3 மாதங்களுக்கு விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
கோடைக்காலத்தில் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையிலும், விரைவு தரிசனம் செய்யவும் திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏப்.1 முதல் ஜூன் 30 வரை 3 மாதங்களுக்கு விஐபி பிரேக் தரிசனத்தை ரத்து செய்துள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ், அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு உயரதிகாரிகளின் சிபாரிசு கடிதங்கள் ரத்து செய்யப்பட உள்ளன. இதன் மூலம், சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. தற்போது விஐபி பிரேக் தரிசனத்தில் தினமும் 4 ஆயிரம் பேர் தரிசனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.