பங்குனி அமாவாசை : ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் ஏராளமான பக்தர்கள் நீராடினார்கள்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மார் 2025 08:03
ராமேஸ்வரம்: பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள்.
பங்குனி அமாவாசை யொட்டி தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். பக்தர்கள் முதலில் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்தனர். பின் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் சிவசிவ என கோஷமிட்டபடி புனித நீராடினார்கள். இதன்பின் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினார்கள். பின் கோயிலுக்குள் சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் காத்திருந்து பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.