Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேவிபட்டினம் நவபாஷாண கடல் சீற்றம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொக்காபுரம் அம்மன் கோவிலில் ஜப்பான் குழுவினர் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பொக்காபுரம் அம்மன் கோவிலில் ஜப்பான் குழுவினர் தரிசனம்

பதிவு செய்த நாள்

23 நவ
2026
12:11

பந்தலூர்: பொக்காபுரம் அம்மன் கோவிலில், ஜப்பானில் சேர்ந்த பக்தர்கள் அம்மனை வழிபட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.


சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் குறிஞ்சி செல்வன் மற்றும் ஜப்பானை சேர்ந்த குருஜி மஷாகிடேதீபக்அயோமா ஆகியோர் தலைமையிலான ஜப்பானில் சேர்ந்த குழுவினர், நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் பல்வேறு சமுதாயப் பணிகள் மற்றும் கோவில் கட்டுமான பணிகளுக்கு உதவிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஜப்பானிலிருந்து வந்த இந்த குழுவினர், பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று அம்மனுக்கு, சிறப்பு பூஜைகள் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் ஜப்பான் குழுவினருக்கு பரிவட்டம் கட்டி, வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தியுடன் அம்மனை வழிபட்ட குழுவினர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி மகிழ்ச்சி அடைந்தனர். குறிஞ்சிசெல்வன் கூறுகையில், ஜப்பானை சேர்ந்த குருஜி என்று அழைக்கப்படும் பெரியவர் தலைமையில், தன்னார்வ குழுவினர் தங்கள் சொந்த பணத்தை கொண்டு, பல்வேறு பகுதியிலும் ஏழைகளுக்கு உதவிகள் செய்து வருகின்றனர். மேலும் இறை பக்தியில் ஆர்வம் கொண்ட இந்த குழுவினர், தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சென்று வழிபடுவது மற்றும் கோவில் வளர்ச்சிகளுக்கு உதவுவது போன்ற செயல்களில், எங்களுடன் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயசீலன், கோவில் பூசாரி மாதன், கூடலூர் அரசு கல்லூரி உதவி பேராசிரியர் மகேஸ்வரன், பந்தலூர் முருகன் கோவில் அறக்கட்டளை தலைவர் ஹரிராமன் தலைமையிலான குழுவினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மஹா தீப கொப்பரை சிறப்பு வழிபாடுகளுக்கு பின் மலை உச்சிக்கு கொண்டு ... மேலும்
 
temple news
திருப்பூர்: ஒரு மனிதரின் பிறப்பு நுாற்றாண்டு விழாவாகக் கொண்டாடப்படுவது இயல்பு. ஆனால், அவர் வாழ்ந்த ... மேலும்
 
temple news
பிரசாந்தி நிலையம்: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, ஸ்ரீ சத்ய சாய் ... மேலும்
 
temple news
குஜராத் மாநிலம் அம்பாஜியில் அமைந்துள்ள ஸ்ரீ காமாட்சி – ஏககாவன் சக்தி பீட ஆலயத்தின் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
தேவிபட்டினம்: தேவிபட்டினம் நவபாஷாண கடல் நீர்மட்டம் உயர்ந்து, கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், நவபாஷாண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar