பதிவு செய்த நாள்
01
ஏப்
2025
11:04
திருப்பதி; ஸ்ரீ ராமநவமி விழாவை கொண்டாடும் வகையில் வரும் ஏப்ரல் 06ம் தேதி திருமலை ஸ்ரீவாரி கோயிலில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
விழாவை முன்னிட்டு, ஏப்ரல் 06 ஆம் தேதி ஸ்ரீவாரி கோயிலில் ஸ்ரீ ராமநவமி ஆஸ்தானம், ஏப்ரல் 07 ஆம் தேதி ஸ்ரீ ராமபட்டாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த நிகழ்வையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 11 மணி வரை, ரங்கநாயககுல மண்டபத்தில் ஸ்ரீ சீதா லட்சுமணன் மற்றும் ஹனுமானின் உற்சவர்களுக்கு ஸ்னபன திருமஞ்சனம் நடைபெறும். இதன் ஒரு பகுதியாக, வேத மந்திரங்கள் முழங்க, ரங்கநாயககுல மண்டபத்தில் உள்ள உற்சவ சிலைகளுக்கு பால், தயிர், தேன், தேங்காய் நீர், மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெறும். மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை ஹனுமான் வாகன சேவை நடைபெறும். அதன் பிறகு, இரவு 9 மணி முதல் 10 மணி வரை பங்கருவாகிலி செந்தாவில் ஸ்ரீ ராம நவமி ஆஸ்தானம் கொண்டாடப்படும். இதேபோல், ஏப்ரல் 07ம் தேதி, ஸ்ரீ ராமரின் முடிசூட்டு விழாவை நினைவுகூரும் வகையில், பங்கருவாகிலி சேந்தா கோயிலின் அர்ச்சகர்கள் இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஸ்ரீ ராம பட்டாபிஷேக ஆஸ்தானத்தை நடத்துகின்றனர்.