சின்ன சேனியம்மன் கோவிலில் தீச்சட்டி திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2025 11:04
வண்ணாரப்பேட்டை; பழைய வண்ணாரப்பேட்டை, சிங்கார தோட்டத்தில், சின்ன சேனியம்மன் திருக்கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவில், கடல் வழியாக வியாபாரம் செய்ய வந்த தென்மாவட்ட மக்களின் காவல் தெய்வங்களான பத்ரகாளியம்மனையும், சேனியம்மனையும் துணைக்கு அழைத்து வர வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலின் 39ம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா, மார்ச் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அக்னி சட்டி திருவிழா நேற்று நடந்தது. இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் விரதம் கடைப்பிடித்து, அக்னி சட்டியை ஏந்தியபடி ஊர்வலமாய் வந்தனர். பிரதான நிகழ்வான தேர் திருவிழா இன்று நடக்கிறது. வழியெங்கும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.