பதிவு செய்த நாள்
01
ஏப்
2025
04:04
கோவை; ராம்நகர் கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில், ஸ்ரீ ராமநவமி பிரம்மோற்சவ விழா, கடந்த மாதம் 28ம் தேதி காலை 5:30 மணிக்கு பகவத் பிரார்த்தனை, அனுக்ஞை, யஜமான சங்கல்பம், விஸ்வக்சேனாதாரனம், கருடப்பிரதிஷ்டையுடன் துவங்கியது. தொடர்ந்து, அன்றாடம் சுவாமிக்கு திருமஞ்சனம் உள்ளிட்ட அன்றாட வைபவங்கள் நடந்தன. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதித்து வந்தார். நேற்று காலை 7:00 மணிக்கு, திருவாராதனம், 7:30 மணிக்கு சதுஸ்தானார்ச்சனம், பூர்ணாஹூதி, 9:30 மணிக்கு திருமஞ்சனம், மாலை 5:00 மணிக்கு சதுஸ்தானார்ச்சனம், பூர்ணாஹூதி நடந்தன. இரவு 7:00 மணிக்கு சேஷவாகனத்தில் சுவாமி எழுந்தருளினார். ராம்நகர் வீதிகளின் வழியே திருவீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று இரவு 7:00 மணிக்கு ஹனுமந்த வாகனத்தில், சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.