Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீராசன கோலத்தில் வல்லக்கோட்டை ... திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பங்குனி கிருத்திகை விழா கோலாகலம் திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் கோயிலில் மூலவர்களுக்கு ஏப். 9ல் பாலாலயம்
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் கோயிலில் மூலவர்களுக்கு ஏப். 9ல் பாலாலயம்

பதிவு செய்த நாள்

01 ஏப்
2025
05:04

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் கோயில் மூலஸ்தானங்களில் எழுந்தருளியுள்ள சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்யகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாளுக்கு ஏப். 9ல் பாலாலயம் நடக்க உள்ளது.


இந்தக் கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் துவங்கும் வகையில் ராஜகோபுரம், கோவர்த்தனாம்பிகை விமானம், வல்லப கணபதி விமானம், படிக்கட்டு விநாயகர் கோயில் விமானம், உபகோயில்களான காசி விஸ்வநாதர் கோயில் விமானம், பழனி ஆண்டவர் கோயில் விமானம், சொக்கநாதர் கோயில் விமானம், அங்காள பரமேஸ்வரி குருநாதசுவாமி கோயில், பாம்பலம்மன் கோயில்களுக்கு பிப்.‌10ல் பாலாலயம் நடந்தது. கோயில் விமானங்களில் சீரமைப்பு பணிகள் முடிந்து வண்ணம் தீட்டும் பணி நடக்கிறது. உற்ஸவர் சன்னதியில் மேல்பகுதி கமலங்களில் வண்ணம் தீட்டும் பணிகள் நிறைவடைந்துள்ளது. அனைத்து மண்டபங்களிலும் பணிகள் நடக்கிறது. ஜூலை 17ல் கும்பாபிஷேகம் நடைபெறும் என சட்ட சபையில் அறிவிக்கப்பட்டது.அதன் பின்பு திருப்பணிகள் விறுவிறுப்பு பெற்றுள்ளது. மார்ச் 5 முதல் மார்ச் 20வரை பங்குனி திருவிழா நடந்ததால், பக்தர்கள் மூலவர்களை தரிசிக்க ஏதுவாக மூலஸ்தானத்தில் கும்பாபிஷேக பணிகளை திருவிழா முடிந்த பின்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.


மூலஸ்தானங்களில் பாலாலயம்; ஏப். 7ல் ஐந்து மூலவர்கள் மூலஸ்தானங்களுக்கான பாலாலயத்திற்கான யாகசாலை பூஜை துவங்குகிறது. ஏப். 9 அன்று மூலவர்களுக்கு பாலாலயம் நடக்கிறது. அதற்கான முதல் கட்ட பணிகளும் நடந்து வருவதாக அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமநாதபுரம்; உலகின் முதன் முதலில் தோன்றிய சிவன் கோயில் என்றழைக்கப்படும்  ராமநாதபுரம் மாவட்டம் ... மேலும்
 
temple news
கோவை; கோவை மருதமலை முருகன் கோவிலில் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில், கோபுர ... மேலும்
 
temple news
கோவை; காட்டூர்பகுதியில் தொட்ராயன் கோவில் வீதியில் உள்ள மணி முத்து மாரியம்மன் கோவில் 49ம் ஆண்டு உற்சவ ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு நெம்மாரா நெல்லிக்குளங்கரை பகவதி அம்மன் கோவில் திருவிழா நேற்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
திருப்பூர்; சிருங்கேரி ஸ்ரீ சாரதாபீடாதீச்வர ஜகத்குரு சங்கராச்சாரிய ஸ்ரீஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar