தஞ்சையில் சோழர்கள் கட்டிய பச்சை காளி பவளக்காளி கோவில் விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஏப் 2025 11:04
தஞ்சை; தஞ்சாவூரின் எட்டுத் திசைகளிலும் சோழர்கள் அம்மன் கோவில் அமைத்து வழிபட்டனர். அதில், விஜயசோழ மன்னரால் கட்டப்பட்ட கோடியம்மன் கோவில் மிகவும் பழமையானது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பச்சைக்காளி, பவளக்காளி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா மார்ச் 10-ல் காப்புக் கட்டுதலுடன் துவங்கியது. அதனை தொடர்ந்து கடந்த 1 ஆம் தேதி மேலவீதியில் உள்ள சங்கரநாராயணன் ஆலயத்தில் இருந்து பச்சைக்காளியும் - கொங்கேனஸ்வர்ர ஆலயத்தில் இருந்து பவளக்காளியும் புறப்பட்டு தஞ்சாவூர் மாநகரின் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதனை தொடர்ந்து நள்ளிரவு மேலவீதியில் பச்சைக் காளி - பவளக்காளி உறவாடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பச்சைக் காளி - பவளக்காளி ஆக்ரோஷமாக ஆடியது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.