Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நிம்மதி கிடைக்கும் ஒரே இடம் கோவில் ... கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாகலுார் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; 3 மாநில பக்தர்கள் சுவாமி தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பாகலுார் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; 3 மாநில பக்தர்கள் சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

03 ஏப்
2025
12:04

பாகலுார்; பாகலுார், கிராம தேவதை மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில், 3 மாநில பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பாகலுாரிலுள்ள பழமையான கிராம தேவதை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த, 30ல் துவங்கியது. நேற்று மதியம், 12:10 மணிக்கு வண்ண மலர்களால் அலங்கரித்த தேரில் உற்சவமூர்த்தி அமர வைக்கப்பட்டு தேரோட்டம் துவங்கியது. ஓசூர், மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, ஒன்றிய கவுன்சிலர் ரவிக்குமார், முன்னாள் பஞ்., தலைவர்கள் ஜெயராமன், முரளிகுமார் பாபு உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை படம் பிடித்து இழுத்தனர்.


முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர், மீண்டும் மாலையில் நிலையை அடைந்தது. தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் இருந்து வந்திருந்த பல ஆயிரம் பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். பாகலுார் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், தேரோட்டத்திற்கு வந்திருந்த பக்தர்களுக்கு, இஸ்லாமிய மக்கள் மற்றும் தர்கா கமிட்டி சார்பில், பக்தர்களுக்கு தண்ணீர், தர்ப்பூசணி உள்ளிட்டவை வழங்கப்பட்டன. விழாவில் இன்றிரவு கிராமதேவதை பல்லக்கு மற்றும் நாளை (ஏப்.4) நள்ளிரவு, 12:00 மணிக்கு திரவுபதி அம்மன் கரகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar