பதிவு செய்த நாள்
11
டிச
2012
10:12
திண்டுக்கல்: அரசு போக்குவரத்துக் கழக (திண்டுக்கல்) பொதுமேலாளர் சுப்பையா அறிக்கை: சபரிமலையில், மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாக்கள், டிச. 27, வரும் ஜன. 4ல் நடக்க உள்ளது. ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக, பழநி, திருச்சி, மதுரை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் இருந்து, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இன்று முதல் வரும் ஜன. 17 வரை, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சம்பந்தப்பட்ட இடங்களில், பக்தர்களுக்கு உதவவும், வழிகாட்டவும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். குமுளியில் இருந்து சபரிமலை செல்ல, இணைப்புப் பேருந்துகள் அதிகளவில் கேரள மாநில போக்குவரத்துக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மண்டல பூஜையின்போது 100 பஸ்களும், மகர விளக்கு திருவிழாவின்போது தேவைக்கேற்பவும், கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பழநி, திருச்சி, மதுரை, திண்டுக்கல்லிற்கு, குமுளியில் முன்பதிவு வசதியும் உள்ளது.