பாங்காக்கில் உள்ள வாட் ஃபோ புத்தர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2025 03:04
பாங்காக்; பிரதமர் நரேந்திர மோடி பாங்காக்கில் உள்ள வாட் ஃபோ கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்தார். தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினாவத்ராவும் இதில் கலந்து கொண்டார்.
பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்கப் பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்து சென்றுள்ளார். பிரதமர் மோடி இன்று பாங்காக்கில் உள்ள வாட் ஃபோ கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்தார்.வாட் ஃபோ என்பது கிராண்ட் பேலஸிலிருந்து தெற்கே 700 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு புத்த கோவிலாகும். இது தாய்லாந்தின் மிகப்பெரிய புத்தர் சிலைகளின் தொகுப்பைக் கொண்டுள்ளது, இதில் உலகப் புகழ்பெற்ற தலம். இங்குள்ள தங்க முலாம் பூசப்பட்ட சாய்ந்த புத்தர் சிலை பிரசித்தி பெற்றது. இக்கோவில் பாங்காக்கின் மிகப் பழமையான கோயில்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டதாகும். சாய்ந்த புத்தர் கோயில் என்றும் அழைக்கப்படும் வாட் ஃபோ கோயிலில் பிரதமர் மோடி இன்று வழிபாடு செய்தார். இதில் தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினாவத்ராவும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.