அழகர்கோவில்; கள்ளழகர் கோயிலின் பவித்ர புஷ்கரணி தெப்பத்தில் பாசிபடியாதவாறு, வண்ண விளக்குகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களுடன் பணிகள் தொடங்கப்பட உள்ளன. இத்தெப்பம் பாசிபடிந்தும், வடக்கு பக்கத்தில் உள்ள படிக்கட்டுகள் சேதமடைந்தும் உள்ளன. பக்தர்கள் தெப்பத்திற்குள் செல்ல அனுமதி கிடையாது. தெப்பத்தை சுற்றியுள்ள கம்பிகள் துருப்பிடித்து, சுற்றுச்சுவர்களின் வர்ணங்கள் அழிந்தும் உள்ளன. பராமரிப்புக்கான திட்டப்பணிகள் இம்மாதம் இறுதிக்குள் தொடங்கி இரண்டு மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிக்காக பெங்களூரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மீண்டும் பாசி படியாமலும், குளத்தில் செடிகள் வளர்வதை தடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. சுற்றுப்புற சுவர் வர்ணம் பூசப்பட்டு, விளக்குகள் அமைத்து புதுத் தோற்றத்தில் அமையவுள்ளது.