பங்குனி துவாதசி; கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2025 10:04
கோவை; பங்குனி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் தங்க காப்பு கவசத்தில் வெங்கடாஜலபதி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல், பங்குனி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம், பூஜை நடைபெற்றன. இதில் உற்சவர் ஸ்ரீதேவி - பூதேவி சமேதராய் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.