மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி தேரோட்டம்; அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2025 10:04
சென்னை; மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர்.
பிரசித்தி பெற்றது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில். இங்கு ஆண்டுதோறும், பங்குனி மாதத்தில் நடக்கும் 10 நாள் பெருவிழா விடையாற்றி கலை விழாவாக நடத்தப்படுகிறது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வர். இந்நிலையில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா ஏப்.3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலிக்க உள்ளார். விழாவில் இன்று ஏப்ரல் 9ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக தேரில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் துவங்கியது. தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நாளை ஏப்ரல் 10ல் அறுபத்து மூவர் வீதியுலா நடைபெறுகிறது.