பதிவு செய்த நாள்
09
ஏப்
2025
10:04
மயிலாடுதுறை; உலகம் முழுவதும் உள்ள 108-க்கு மேற்பட்ட நாடுகளில் வசிக்கும் ஜெயின் சமூக மக்களால் உலக அமைதி வேண்டி நடத்தப்படும் நவ்கர் மகா மந்திர் விழா:- மயிலாடுதுறை இல் நடைபெற்ற நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்ட ஜெயின் மக்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
மகாவீரர் ஜெயந்தி நாளை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஏப்ரல் 9 ஆம் தேதியான இன்று காலை 8.01 மணி முதல் 9 30 மணி வரை உலகமெங்கும் 108க்கு மேற்பட்ட நாடுகளில் வசிக்கும் ஜெயின் சமூக மக்கள், உலக அமைதி வேண்டி ஒரே நேரத்தில் மகா மந்திர் நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். அந்த வகையில் மயிலாடுதுறை நகரில் 500க்கும் மேற்பட்ட ஜெயில் சமூக குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், அவர்கள் மகாதான தெருவில் உள்ள ஜெயின் ஜெயின் சங்க கட்டடத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் ஒரே இடத்தில் அமர்ந்து நவ்கர் மகா மந்திர ஜெபத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜெயின் இன்டர்நேஷனல் ட்ரேட் ஆர்கனைசேஷன் (JITO) இந்த நிகழ்வை முன்னெடுத்துள்ளது.. உலகமெங்கும் உள்ள ஆறாயிரத்துக்கு மேற்பட்ட ஜெயின் தேராசர், உபாஷ்ரயா ஸ்தானிக் ஆகியவற்றில் இருந்து இந்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நாடுகளை சேர்ந்த முதல்வர்கள் கட்சி பாகுபாடு இன்றி கலந்து கொள்ள உள்ளனர். இனி ஆண்டுதோறும் ஏப்ரல் எட்டாம் தேதி இந்த மகா மந்திர் நிகழ்வு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் உச்சரிக்கப்படும் மந்திரம்: நமோ அரிஹந்தானம் நமோ ஸித்தானம் நமோ ஆயரியானம் நமோ உவஜ்ஜாயானம் நமோ லோயே ஸவ்வ ஸாஹுனம் ஏஸோ பஞ்ச நமுக்காரோ ஸவ்வ பாவப் பணாசநோ மங்களா நம்ஸ ஸவ்வேஸிம் படமம் ஹவ மங்களம் இந்த மஹா மந்திரத்தில் உள்ள கருத்துக்கள் என்னவென்றால் நான் எல்லோரையும் விட மேலாகிய அருகர், சித்தர், ஆச்சாரியர், உபாத்தியாயர் ஆகிய அனைவருக்கும் மற்றும் உலகிலுள்ள எல்லா நற்துறவிகளுக்கும் எங்களுடைய பணிவான நமஸ்காரங்கள்.
1. நான் எந்த உயிர்க்கும் தீங்கு செய்யமாட்டேன்.
2. சைவமாக இருப்பேன், அசைவம் சாப்பிட மாட்டேன்.
3. பெரியவர்களாக இருந்தாலும், சிறியவர்களாக இருந்தாலும் மரியாதை கொடுப்பேன்.
4. என்னால் முடிந்த அளவு பிறர்க்கு உதவி செய்ய முயற்சிப்பேன்.
5. எந்தவித தவறான காரியங்களிலும் ஈடுபட மாட்டேன் என்பது இந்த மந்திரத்தின் பொருளாகும்.