பேரம்பாக்கம்: பேரம்பாக்கம் அடுத்த, நரசிங்கபுரம் கிராமத்தில் உள்ள லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில், சுவாதி திருநாளான நேற்று, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று காலை 10:00 மணிக்கு மூலவர் நரசிம்ம பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு பெருமாள் வண்ண மலர் களால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.