பதிவு செய்த நாள்
10
ஏப்
2025
10:04
பொன்னேரி; பொன்னேரி ஆனந்தவல்லி அம்மை வலம் கொண்ட அகத்தீஸ்வரர் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவ விழா, கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை தொடர்ந்து அன்னவாகனம், சூரியபிரபை சந்திரபிரபை, சிம்மவாகனம், அதிகாரநந்தி கோபுர தரிசனம், பூதவாகன காட்சி, காமதேனு வாகனம், நாகவாகனம், யானை வாகனம் என, தொடர்ந்து உத்சவங்களும், பஞ்ச மூர்த்திகள் வீதியுலாவும் நடந்தன. விழாவின், ஏழாம் நாள் உத்சவமான நேற்று தேர்த் திருவிழா விமரிசையாக நடந்தது. காலை பூந்தேரில் எழுந்தருளிய உத்சவ பெருமான், மாடவீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் திரளாக பங்கேற்று, ‘ஓம் நமச்சிவாய... ஓம் நமச்சிவாய’ என கோஷம் எழுப்பி, தேரின் வடம் பிடித்து இழுத்தனர்.