பதிவு செய்த நாள்
10
ஏப்
2025
11:04
புதுச்சேரி; மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவில் தக்ஷிணாமூர்த்தி, 18 சித்தர்களுக்கு மகா கும்பாபிஷேகம் வரும் 16ம் தேதி நடக்கிறது.
புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில் 27 அடி உயர சனீஸ்வர பகவான் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 9 அடி உயர தக் ஷிணாமூர்த்தி உடன் 6 அடி உயர 18 சித்தர்கள் மற்றும் 27 நட்சத்திரம், 12 ராசி பீடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் சித்த குரு பீடம் மகா கும்பாபிஷேகம் வரும் 16ம் தேதி நடக்கிறது.
இதையொட்டி, வரும் 14ம் தேதி காலை 8:30 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிர ஹோமம், மகாலட்சுமி ஹோமம், கோ பூஜை, ரிஷப பூஜை மற்றும் அஸ்வ பூஜை, மாலை 5:30 மணிக்கு வாஸ்த்து சாந்தி, மிருத்து சங்கிரகனம், கும்பா அலங்காரம், ரக் ஷாபந்தனம், முதல் காலயாக பூஜை நடக்கிறது. வரும் 15ம் தேதி காலை 9:00 மணிக்கு அஷ்டலஷ்மி பூஜை, தன பூஜை, அஸ்டாதச கிரியை புதிய சுவாமிகளுக்கு கண் திறப்பு விழா, இரண்டாம் கால யாக பூஜை, மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாக வேள்வி, மகா தீபாரதனை நடக்கிறது. முக்கிய நிகழ்வாக, வரும் 16ம் தேதி காலை 6:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, காலை 9:00 மணிக்கு கலசம் புறப்பாடு, காலை 10:00 மணிக்கு தக் ஷிணாமூர்த்திக்கு கும்பாபிேஷகம், காலை 10:18 மணிக்கு 18 சித்தர்களுக்கு மகா கும்பாபிஷேகம், 10:30 மணிக்கு அனைத்து குருமார்களுக்கும் மகா தீப ஆராதனை நடக்கிறது.