திண்டுக்கல்; திண்டுக்கல், தாடிக்கொம்பு பெருமாள் கோயிலில் கல்யாண சவுந்தரவள்ளித் தாயார் சமேத சவுந்தரராஜ பெருமாள் திருக்கல்யாண வைபவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ்பாலாஜி, மாநகர் பொருளாளர் சரவணன், அறங்காவலர்கள் ராமானுஜம், உபயதாரர்கள் வேலுச்சாமி, கந்தசாமி உள்பட பலர் பங்கேற்றனர். பிரசாதம் வழங்கப்பட்டது.