சின்னமனுார் செல்வ விநாயகர் கோயிலில் பாலமுருகன், ஐயப்பன், வெள்ளையம்மாள், பொம்மியம்மாள் சமேத மதுரை வீரன், முனீஸ்வரர், நாகம்மாள், சப்த கன்னிகள், உப சன்னிதானங்களில் பரிவார தெய்வங்களுக்கு ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக கணபதி ஹோமம், பூர்ணாஹீதி, நவகிரக ஹோமம், சுதர்சன ஹோமம், வாஸ்துபூஜை, நான்கு கால யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் சின்னமனுார், உத்தமபாளையம், சீப்பாலக்கோட்டை, ஓடைப்பட்டி பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் திருப்பணிதாரர்கள் பால்வண்ணன் தலைமையில் ஈஸ்வரி, பாரத், வர்ஷா முன்னிலை வகித்தனர். குப்தா பிரதர்ஸ், துர்கா வஜ்ரவேல், தி.மு.க., தெற்கு மாவட்ட தலைவர் மனோகரன், ரத்னவேல்பாண்டியன், தவமணி, மறவர் சமூக நலச்சங்க தலைவர் ராமசந்திரன், ஆதிசக்தி லாரி சர்வீஸ் உரிமையாளர் கோபாலகிருஷ்ணன், விலங்கையா, வி சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் ரமேஷ், வி.கே. பல் மருத்துவமனை டாக்டர்கள் விக்னேஷ், கார்த்திகாஸ்ரீ உள்ளிட்ட ஏராளமானோர் விழாவில் பங்கேற்றனர்.