புவனகிரி; கீரப்பாளையம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கீரப்பாளையம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா கடந்த 1ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினசரி பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். நேற்று முன் தினம் இரவு 7:00 மணி முதல் 9.00 க்குள் வள்ளி,தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று விடியற்காலை 5:00 மணிக்கு அகவல் பாராயணம், ஜோதி தரிசனம் நடந்தது. காலை 7.00 மணிக்கு வெள்ளாற்றங்கரையில் இருந்து காவடி உற்சவம் துவங்கி கோவிலை வந்தடைந்தது. மதியம் 1:30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு உற்சவமூர்த்தி வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.