பதிவு செய்த நாள்
12
ஏப்
2025
01:04
ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்.. முன்னேற்றத்தை நோக்கி நடை போடும் உங்களுக்கு பிறக்கும் சித்திரை யோகமான மாதம். விரய ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரித்தாலும், லாப ஸ்தான ராகு ஏப்.26 வரை முன்னேற்றமான பலனை வழங்குவார். நினைத்தது நடந்தேறும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் நெருக்கடி விலகும். தொடர்ந்து அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் வரவை அதிகரிப்பார். தம்பதிக்குள் ஏற்பட்ட இடைவெளி குறையும். ராசிக்குள் சஞ்சரிக்கும் குருவால் அலைச்சல் அதிகரித்தாலும் அவரது பார்வையால் மே 11 வரை யோகப்பலன் கிடைக்கும். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னை தீரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். மாணவர்களுக்கு தேர்வு முடிவு சாதகமாகும். உயர் கல்வி கனவு நனவாகும். எதிர்பார்த்த பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். விவசாயிகளுக்கு வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். தொழில் முன்னேற்றம் அடையும் என்றாலும் கணக்கு வழக்கில் கவனம் தேவை. ஜீவன ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் பணியாளர்களுக்கு கூடுதல் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும்.
சந்திராஷ்டமம்: ஏப்.18.
அதிர்ஷ்ட நாள்: ஏப்.15,19,24,28, மே 1,6,10
பரிகாரம்: நடராஜரை வழிபட நன்மைகள் நடக்கும்.
ரோகிணி: தெளிவான மனதுடன் உறுதியாக செயல்படும் உங்களுக்கு பிறக்கும் சித்திரை நன்மையான மாதம். 10ல் சஞ்சரிக்கும் சனி வேலைப்பளு, பணியில் நெருக்கடியை ஏற்படுத்திய நிலையில், விரய ஸ்தானத்தில் உள்ள சூரியனால் வீண் செலவு கூடும். 3ல் இருக்கும் செவ்வாய் உங்கள் முயற்சியை வெற்றியாக்குவார். சகோதர வழியில் ஏற்பட்ட பிரச்னைக்கு முடிவு கிடைக்கும். உழைப்பிற்கேற்ற ஆதாயம் வரும். எடுத்த வேலையை முடித்து ஆதாயம் அடைய வைப்பார். மாதத்தின் முற்பகுதியில் யோகப்பலனை ராகு வழங்குவார். விருப்பத்தை நிறைவேற்றுவார். வருமானம் பெருகும். தொழிலில் முன்னேற்றத்தை அளிப்பார். தடைபட்ட பணிகளை நடத்தி வைப்பார். ஜென்ம குருவால் உங்கள் வேலைகள் நடந்தேறும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஈடுபாடு உண்டாகும். கலைஞர்களுக்கு மாதத்தின் முற்பகுதியில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். விவசாயத்தில் ஆதாயம் கூடும். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ் தொழில் புரிவோரும், யூனிபார்ம் அணியும் பணியாளர்களும் முன்னேற்றம் அடைவர். வங்கியில் கேட்ட கடன் கிடைக்கும். குடும்பத்தில் நெருக்கடி விலகும். தொழிலில் புதிய முயற்சி வெற்றியாகும். அரசியல்வாதிகள் தலைமையை அனுசரித்துச் செல்வதும், கவனமாக செயல்படுவதும் நல்லது. தம்பதிகள் ஒருவரை ஒருவர் ஆலோசித்து செயல்படுவதால் குடும்பம் முன்னேறும். பொன், பொருள் சேரும்.
சந்திராஷ்டமம்: ஏப்.19
அதிர்ஷ்ட நாள்: ஏப்.15,20,24,29,மே2,6,11
பரிகாரம்: குலதெய்வத்தை வழிபட குறைகள் நீங்கும்.
மிருகசீரிடம் 1, 2 ம் பாதம்: தன்னம்பிக்கையோடு செயல்படும் உங்களுக்கு பிறக்கும் சித்திரை முயற்சியால் முன்னேற்றம் காணும் மாதம். மாதம் முழுவதும் நட்சத்திராதிபதி செவ்வாய் சாதகமாக இருப்பதால் முயற்சி எல்லாம் வெற்றியாகும். ஈடுபடும் வேலைகளில் ஆதாயம் உண்டாகும். தடைபட்ட காரியங்கள் முடிவிற்கு வரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பணியில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றி பெறும். மாத தொடக்கத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு, சுக்கிரன், புதனால் நீண்ட நாள் கனவு நனவாகும். பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான மன நிலை இருக்கும். குருபகவான் அலைச்சலை ஏற்படுத்தினாலும் ஆதாயத்தை அதிகரிப்பார். சித்திரையில் வாழ்க்கைக்குரிய அடிப்படைகளை அமைத்துக் கொள்வீர்கள். சுபவிஷயங்கள் நடந்தேறும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். மாணவர்களுக்கு உயர்கல்வி கனவு நனவாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். ஒரு சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். ஏப். 26 முதல் சுக ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் உங்கள் பிரச்னைகளை குடும்பத்தினரிடம் கொண்டு செல்ல வேண்டாம். உணவால் சிலர் சங்கடத்திற்கு ஆளாக வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கை அவசியம். உடல்நிலையில் கவனம் தேவை. தாய்வழி உறவுகளால் சங்கடங்கள் தோன்ற வாய்ப்பிருப்பதால் அவர்களை விட்டு ஓரடி விலகி இருப்பது நன்மையாகும்.
சந்திராஷ்டமம்: ஏப்.20
அதிர்ஷ்ட நாள்: ஏப்.15,18,24,27, மே 6,9
பரிகாரம்: திருத்தணி முருகனை வழிபட திருப்தி உண்டாகும்.