பதிவு செய்த நாள்
12
ஏப்
2025
01:04
மிதுனம்: மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்.. முயற்சியால் முன்னேறும் உங்களுக்கு பிறக்கும் சித்திரை மிக யோகமான மாதமாக இருக்கும். முயற்சிகள் ஒவ்வொன்றும் வெற்றி பெறும். செவ்வாய் தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரித்து நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும் 11ல் உச்சமாக சஞ்சரிக்கும் சூரியன் உங்கள் நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவார். பெரிய திட்டங்களைத் தீட்டி அதில் வெற்றி காண்பீர்கள். முடங்கிக் கிடந்த தொழில் முன்னேற்றம் அடையும். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் லாபம் அடையும். கூட்டுத்தொழிலில் இருந்த சங்கடம் விலகும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தந்தையின் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். அரசியல்வாதிகள் செல்வாக்குடன் திகழ்வர். சிலருக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும். ராசிநாதன் புதன் 10, 11 ம் இடங்களில் சஞ்சரித்து யோக பலன்களை வழங்குவார். திட்டங்களை வெற்றி பெற வைப்பார். வியாபாரிகள், கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு மே 11 வரை பார்வைகளால் நன்மை அளிப்பார். எதிர்ப்புகளை இல்லாமல் செய்வார். முன்னேற்றம் தருவார். மாணவர்களுக்கு முன்னேற்றமான காலமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சேமிப்பு உயரும். பொன், பொருள் சேரும்.
சந்திராஷ்டமம்: ஏப்.20.
அதிர்ஷ்ட நாள்: ஏப்.14,18,23,27, மே5, 9,14
பரிகாரம்: ஸ்ரீரங்க நாதரை வழிபட சுபிட்சம் உண்டாகும்.
திருவாதிரை: முதலிடத்தைப் பிடிக்கும் நோக்குடன் செயல்படும் உங்களுக்கு சித்திரை முன்னேற்றமான மாதமாக இருக்கும். மாத தொடக்கத்தில் 10ல் சஞ்சரிக்கும் புதனும் ராகுவும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். வியாபாரம் தொழிலில் லாபத்தை அதிகரிப்பர். வெளிநாட்டு முயற்சிகளை சாதகமாக்குவர். ஏப்.26 முதல் பாக்கிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாகும் ராகு பொருளாதார நிலையில் யோகம் அளிப்பார். புதிய திட்டங்களைத் தீட்ட வைப்பார். நினைத்த வேலைகளை நடத்தி அதில் லாபம் காண வைப்பார். கேதுவும் 3ல் சஞ்சரிப்பதால் முயற்சிகள் வெற்றியாகும். தடைபட்ட வேலைகள் ஒவ்வொன்றாக நடந்தேறும். புதன் சாதகமாக இருப்பதால் வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வங்கியில் கேட்டிருந்த பணம் வரும். அரசு வழியில் தொழில் தொடங்க அனுமதி கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். வெளிநாடு செல்வதற்கு முயற்சிப்பவர்களுக்கு அதற்குரிய வாய்ப்பு அமையும். என்றாலும், 2ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்தின் மீது அக்கறை செலுத்துவதும், வார்த்தைகளில் நிதானம் காப்பதும் நன்மை தரும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். விவசாயிகள் கவனமாக செயல்படுவது நல்லது. பணியாளர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். சொத்து சேரும். செல்வாக்கு அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: ஏப்.21.
அதிர்ஷ்ட நாள்: ஏப்.14, 22, 23. மே 4, 5, 13, 14.
பரிகாரம்: வராகியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்: சூழ்நிலை அறிந்து செயல்படும் உங்களுக்கு சித்திரை அதிர்ஷ்டமான மாதமாகும். குரு பகவான் விரய ஸ்தானத்தில் இருப்பதால் சுபச்செலவு அதிகரிக்கும். இடம், வீடு, வாகனம் வாங்குவீர்கள் அவரது பார்வையால் உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருந்த பயம் நீங்கும். குழப்பம் விலகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். எதிர்ப்பு விலகும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். மறைந்திருந்த புகழ் வெளிப்படும். சமூக அந்தஸ்து உயரும். இந்த நிலையில் 11ல் உள்ள சூரியன் செயல்களில் லாபத்தை ஏற்படுத்துவார். வியாபாரம், தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். புதிய தொழில் தொடங்க வைப்பார். வரவேண்டிய பணம் வரும். ஏப். 26 முதல் ராகு, கேது சாதகமாக இருப்பதால் தைரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். மாதம் முழுவதும் புதன் சாதகமாக இருப்பதால் நினைப்பது நடக்கும். கலைஞர்கள், வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவர். வாங்க நினைத்த சொத்தை வாங்குவீர்கள். 9ல் உள்ள சனி பகவான் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். இதுவரை சந்தித்த பிரச்னைகள் மறையும். கணவன், மனைவி உறவில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
சந்திராஷ்டமம்: ஏப்.22.
அதிர்ஷ்ட நாள்: ஏப்.14, 21, 23, 30, மே 3, 5, 12, 14.
பரிகாரம்: பார்வதியை வழிபட நன்மை உண்டாகும்.