தென் திருப்பதியில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தங்க தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2025 11:04
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் தென் திருப்பதியில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிப்பாடு நடைபெற்றது. பின் தங்க தேரில் ஸ்ரீ மலையப்பசாமி வலம் வந்தார். மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையத்தில் தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆனந்த ஆலயம் அமைந்துள்ளது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, நேற்று அதிகாலை 4 மணிக்கு சுப்ரபாதம், பின் விஸ்வரூப தரிசனம், தோமாலை, சகஸ்ர நாமார்ச்சனை, நிவேதனம், பலி, சாற்றுமுறை ஆகியவை நடைபெற்றது. மாலை, ஸ்ரீமலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, புதேவியுடன் தங்க தேரில் நான்கு மாட வீதியில் வலம் வந்து தேர் நிலையை அடைந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அன்னூர் கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தினர் செய்திருந்தனர்.