தேவகோட்டை; தேவகோட்டை கோதண்டராமர் ஸ்வாமி கோவில் ராமநவமி பிருமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சிறப்பு திருமஞ்சனமும் சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஐந்தாம் நாள் ராமர் சீதை திருக்கல்யாணம் நடந்தது. நேற்று மாலை கோதண்டராமர் தேரோட்டம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் கோதண்டராமர், சீதை வீற்றிருக்க தேரில் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். ஏராளமான பக்தர்கள் விழாவில் பங்கேற்ற சுவாமி தரிசனம் செய்தனர்.