பழநி முருகன் கோவிலில் ஆனந்த விநாயகருக்கு கும்ப கலசங்கள் வைத்து பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2025 11:04
பழநி; பழநி கோவிலில் விசுவாவசு ஆண்டு சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பழநி கோயில்களில் விசுவாவசு ஆண்டு சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. பழநி கோயிலில் உள்ள ஆனந்த விநாயகருக்கு கும்ப கலசங்கள் வைத்து கணபதி யாகம் நடைபெற்றது. யாகத்தில் வைக்கப்பட்ட கலசநீரில் விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு வெள்ளிக் கவச அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. பழநி கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வருகை அதிகம் இருந்தது மூன்று மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயில், லட்சுமி நாராயண பெருமாள், பட்டத்து விநாயகர் கோயில் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.