Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருத்தாசலம் கோவில்களில் தமிழ் ... பிறந்தது தமிழ் புத்தாண்டு கோவில்களில் சிறப்பு பூஜை பிறந்தது தமிழ் புத்தாண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாவூற்று வேலப்பர் கோயிலில் சித்திரை திருவிழா
எழுத்தின் அளவு:
மாவூற்று வேலப்பர் கோயிலில் சித்திரை திருவிழா

பதிவு செய்த நாள்

15 ஏப்
2025
12:04

ஆண்டிபட்டி; மாவூற்று வேலப்பர் கோயில் சித்திரை திருவிழாவில் தேனி, வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். நேற்று முன் தினம் நள்ளிரவு முதலே பக்தர்கள் குவிந்தனர். விழாவை முன்னிட்டு வேலப்பருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து வழிபட்டனர். கருப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். நுாற்றுக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து காவடி, பால்குடம் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


ஆண்டிபட்டியில் இருந்து அரசு சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு இருந்தது. பக்தர்கள் வசதிக்காக கோயில் வளாகத்தில் குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டன. பஸ், டூவீலர்கள், நான்கு சக்கர வாகனங்கள் குறிப்பிட்ட துாரத்திற்கு பின் அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் கூட்ட நெரிசலில் 2 கி.மீ., துாரம் நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு பணியில் போலீசாரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் தெப்பம்பட்டியில் இருந்து 8 கி.மீ., துாரத்திற்கு பல இடங்களில் கூட்ட நெரிசல், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து திரும்பினர். விழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோயில் செயல் அலுவலர் நதியா, விழாக் குழுவினர் செய்திருந்தனர். ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் பெற்றுச் சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி:  பழநி முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டு பராபவ ஆண்டு சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்: ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயிலில், ஏராளமான வெளி மாநில பக்தர்கள் ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா 7 கிராம மக்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருநீர் அண்ணாமலை கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை ... மேலும்
 
temple news
சென்னை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்தனர்.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar