மதுரை சித்திரைத் திருவிழா; மீனாட்சி திருக்கல்யாணம் காண ஏப். 29 முதல் முன் பதிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2025 02:04
மதுரை; மதுரை சித்திரைத் திருவிழாவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை காண ஏப். 29 முதல் மே2 வரை முன் பதிவு செய்யலாம் என கோவில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் புகழ் பெற்ற சித்திரை பெருவிழா வருகின்ற 28.04.2025-ஆம் தேதி முதல் 10.05.2025-ஆம் தேதி வரை சிறப்பாக நடைபெறவுள்ளது. பெருவிழாவில் முக்கிய உற்சவமான திருக்கல்யாண உற்சவம் மே 8ம் தேதி கோயிலில் வடக்காடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் நடைபெறவுள்ளது. மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண உற்சவத்தினை தரிசிக்க விரும்பும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200/- மற்றும் ரூ.500/-க்கான கட்டணச்சீட்டுகள் பெற்றவர்கள் வடக்கு கோபுரம் வழியாகவும் மற்றும் கட்டணமில்லா தரிசன முறையில் முதலில் வருபவர்களுக்கு முதலில் அனுமதி (First Come First Serve) என்ற அடிப்படையில் பக்தர்கள் கொள்ளளவிற்கேற்ப தெற்கு கோபுரம் வழியாகவும் திருக்கல்யாண உற்சவத்தை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்களின் வசதிக்காக இந்து https://hrce.tn.gov.in-மற்றும் சமய அறநிலையத்துறை இணையதளமான இத்திருக்கோயிலின் இணையதளமான https://maduraimeenakshi.hrce.tn.gov.in- 29.04.2025 5 02.05.2025-9.00 மணி முடிய ரூ.500/- மற்றும் ரூ.200/- கட்டணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண உற்சவத்திற்கு ரூ.50/- மற்றும் ரூ.100/- மதிப்புக் கொண்ட மொய் காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்களுக்காக இந்து சமய அறநிலையத்துறை இணையதளமான (https://hrce.tn.gov.in) மற்றும் இத்திருக்கோயிலின் (https://maduraimeenakshi.hrce.tn.gov.in) 08.05.2025 காணிக்கை செலுத்திட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் இதனைப் பயன்படுத்தி மொய் காணிக்கை செலுத்தலாம் என கோவில் இணை ஆணையர் ச.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.